counter hit xanga
June 26, 2022

தமிழ் தேசியக் கூட்டமைப்பு மு.க. ஸ்டாலினை உலகம் முழுவதற்குமான தமிழ் தலைவராக இருக்கச் சொல்கிறது!

Last Updated on May 12, 2021 by Panduka Herath

புதிய தமிழக முதல்வர் அவர்களுக்கு (தி.மு.க வின் தலைவர்)
மு.க. ஸ்டாலினை தமிழ் தேசியக் கூட்டமைப்பு (T.N.A) வாழ்த்துக்களை தெரிவித்ததோடு வடக்கு கிழக்கு பகுதிகளுக்கு விஜயம் ஒன்றை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.

தமிழக முதல்வர் பதவிஏற்ற பின்னர் வடக்கு கிழக்கில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளும் வாழ்த்து செய்திகளை அனுப்பியுள்ளனர்.
மேலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளும் தனித்தனி வாழ்த்துக்களை அனுப்பியுள்ளனர். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனதிராஜா தன் வாழ்த்துச் செய்தியில் இலங்கையில் உள்ள தமிழ் மக்களின் பிரச்சினையை தீர்க்க தலையிடுமாறு கோரியுள்ளார்.

தனது வாழ்த்துச் செய்தியில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் உலகம் முழுவதிலும் தமிழ் தலைவராக இருப்பதற்கான சாத்தியம் இருப்பதால், மு.க. ஸ்டாலினை அந்த இடத்திற்கு கொண்டு வர முயற்சிக்க வேண்டும்” என்றார்.

தமிழ் மக்கள் கூட்டணித் தலைவர் சி.வி. திரு. விக்னேஸ்வரனும் ஈ.பி.ஆர்.எல்.எஃப் தலைவராக உள்ள சுரேஷ் பிரேமச்சந்திரன், புலட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்தன் மற்றும் பலர் தங்கள் வாழ்த்துக்களை அனுப்பியுள்ளனர்.

சமீபத்தில் முடிவடைந்த தமிழகத் தேர்தலில் 234 தொகுதிகளில் 133 தொகுதி இணை தம் வசப்படுத்திய தி.மு.க, முன்னாள் முதலமைச்சர் எம்.கே.கருணாநிதியின் கட்சியின் வெற்றியைத் தொடர்ந்து, தமிழக முதல்வர் (கட்சியின் தற்போதைய தலைவர்) கருணாநிதியின் மகன் மு.க ஸ்டார்லின் மே 7 அன்று பதவியேற்றார். அதன்பிறகு முதல்வர் ஐந்து அரசாங்க உத்தரவுகளில் கையெழுத்திட்டார். கருணாநிதி பயன்படுத்திய பழைய ‘மை’ பேனாவைப் பயன்படுத்தி கையெழுத்திட்டமை குறிப்பிடத்தக்கது.