counter hit xanga
March 26, 2023

ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக நியமித்தது குறித்து பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனம் அறிக்கை.

Last Updated on May 24, 2022 by Desman Chathuranga

ஜனநாயகம் மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மைக்கான மக்கள் போராட்டத்தின் பின்னால் உறுதியாக நிற்கும் பல்கலைக்கழக கல்வியாளர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தேசிய தொழிற்சங்கமான பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனம் (குருவுயு) 12ந் திகதி மே 2022 அன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்~ இலங்கையின் பிரதமராக திரு. ரணில் விக்கிரமசிங்கவை எவ்வித ஆலோசனையும் இன்றி சுயமாக நியமித்ததை வன்மையாக கண்டிக்கிறது. 09 மே 2022 அன்று திரு.மகிந்த ராஜபக்ச ராஜினாமா செய்ததன் காரணமாக பிரதமர் பதவி வெற்றிடமாகியதால், அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ளபடி, ” யார் பாராளுமன்றத்தின் அதிக நம்பிக்கையை பெற வாய்ப்புள்ளது” என்ற கருத்துப்படி அவரைப் பிரதமராக நியமிப்பது ஜனாதிபதியின் கடமையாகும். எனினும் தனிப்பட்ட அல்லது அரசியல் காரணங்களுக்காக அவர் விரும்பும் யாரையும் அவர் நியமிக்கலாம் என்று இது அர்த்தப்படுத்துவதில்லை. உண்மையில், திரு. விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் பெரும்பான்மையைப் பெறுவாரா இல்லையா என்பது அவர் பிரதமராக நியமிக்கப்பட்ட பின்னர் ஆராயப்பட்டு வருகிறது என்பது வெளிப்படையாகத் தெரிகிறது. இது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது.

அண்மைய வாரங்களில் அரசியல் ஸ்தாபனத்தில் ஏற்பட்ட அனைத்து முக்கிய மாற்றங்களும் மக்கள் போராட்ட இயக்கத்தின் கோரிக்கைகளால் தூண்டப்பட்டவை என்பதை திரு. கோட்டாபாய ராஜபக்~ மற்றும் திரு.ரணில் விக்கிரமசிங்க ஆகிய இருவருக்கும் நினைவுபடுத்த விரும்புகிறோம். மக்களின் விடாப்பிடியான கோரிக்கையின் காரணமாகவே முன்னாள் பிரதமர் உள்ளிட்டோர் பதவி விலக நேரிட்டது. எதிர்ப்பு இயக்கம் காரணமாகவே அனைத்துக் கட்சி இடைக்கால அரசு நியமிக்கப்படுவதற்கான வாய்ப்பு உருவாக்கப்பட்டது. குடிமக்களுக்கு இப்போது தெளிவாகத் தெரிந்த விஷயம் என்னவென்றால், இந்த ஜனநாயக வேளியிடல் ஜனாதிபதியால் தனக்கு விருப்பமான வேட்பாளரை நியமிப்பதற்காக நடாத்தப்பட்டது.

அனைத்துக் கட்சிகள் அல்லது பல கட்சிகளைக் கொண்ட இடைக்கால அரசாங்கத்தின் சாத்தியக்கூறுகளை ஆராய்வதற்காக ஜனாதிபதி அனைத்து அரசியல் கட்சிகளுடனும் அதிகபட்சமாக பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்ததில் நாங்கள் திருப்தியடையவில்லை. எனவே, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் முன்னோட்டமில்லாத நடவடிக்கையானது, அவருக்கும் திரு ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையிலான ஜனநாயகமற்ற மற்றும் ஊழல் நிறைந்த அரசியல் உடன்படிக்கையாக மட்டுமே விளக்கப்பட முடியும், திரு. விக்கிரமசிங்கவுக்கு ஜனாதிபதியின் தரப்பு முன் ஆதரவை வழங்கியமை மேலும் இதற்கு சான்றாகும். அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிகளுக்கு தீர்வு காண்பதற்கான மக்கள் போராட்டத்தை அப்பட்டமாக புறக்கணித்து நடாதடதப்பட்ட இந்த அரசியல் செயல்முறை கையாளுதல் குடிமக்களுடனான ஜனாதிபதியின் மோதலை மேலும் அதிகரிக்கிறது.
திரு. ரணில் விக்கிரமசிங்க தன்னை பிரதமராக நியமிக்குமாறு தாம் ஒருபோதும் கோரவில்லை என்று பதிவு செய்துள்ளார். ஜனாதிபதியால் மட்டும் தான் அழைக்கப்பட்டதாகவும், சொந்தக் கட்சியின் ஆதரவோ வேறு எந்த நபர்களிடமிருந்தோ ஆதரவுக்கான எழுத்துப்பூர்வ உறுதிமொழிகளும் தாம் பெறவில்லை என்றும் அவர் கூறுகிறார்.

மேலும், திரு. விக்கிரமசிங்க, அவர்கள் கூடுதலாக அசாதாரணமான மற்றும் மோசமான தேர்தல் சாதனையைப் பெற்றுள்ளார் என்பதுடன் அவரது கட்சிக்கு தொடர்ச்சியான தேர்தல் தோல்விகளும் உண்டு, கடந்த பொதுத் தேர்தலில அவரது சொந்த தேர்தலை கூட அவரினால் உறுதிப்படுத்த முடியவில்லை; என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், தொடர்ந்தும் ராஜபக்~ நலன்களைப் பாதுகாத்து சேவையாற்றினார் எனவும் மற்றும் மத்திய வங்கி மோசடியில் நேரடியாகவோ அல்லது அதை மூடிமறைப்பதன் மூலமாகவோ அவர் ஈடுபட்டுள்ளார் என்றும் அவர் மீது பரவலாக குற்றச்சாட்டுகள் உள்ளன. இவற்றில் சிலவற்றை அவரது அரசியல் தகுதியின்மைகளாக குறிப்பிடலாம். தற்போதைய எதிர்ப்பு இயக்கம்; இந்த நாட்டின் அரசியல் கட்டமைப்பில் இருந்து எதை அகற்ற எத்தணிக்கின்றதோ அவ்விடயதினையே இவர் துல்லியமாக சார்ந்து நிற்கின்றார்.

ஜனாதிபதி உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் என்ற மக்களின் கோரிக்கையையும்;;, ஜனநாயக மற்றும் அரசியலமைப்பு ரீதியாக நம்பகமான ஒரு இடைக்கால அரசாங்கத்தை ஸ்தாபித்தல வேண்டும் என்பதனையையும் குருவுயு மீண்டும் வலியுறுத்துகிறது.அத்தகைய இடைக்கால அரசு உடனடியாக் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும மற்றும் பொறுப்பான அரசாங்கத்தினை நிறுவுவதற்கான பிற அரசியல் சீர்திருத்தங்களையும் முன்னெடுக்க வேண்டும். ஜனாதிபதி ராஜபக்~ மக்களின் ஜனநாயகக் கோரிக்கைகளைத் தொடர்ந்து கீழ்நிலைப்படுத்தி, தவிர்க்க முடியாத மற்றும் தாமதமான தனது ஆட்சியின் முடிவை நீடிப்பதற்கான அரசியல் ஒப்பந்தங்களைத் தொடர்ந்தால், அது நிச்சயமாக பொருளாதார மற்றும் அரசியல் முன்னணிகளில் பேரழிவுகரமான விளைவுகளை ஏற்படுத்தும்.

‘அரகலயா’ (போராட்டம்) என்று அழைக்கப்படும் துடிப்பான மற்றும் ஆற்றல் மிக்க இளைஞர் இயக்கம் வழிநடத்தும் மாபெரும் ஜனநாயகப் போராட்டத்தின் மூலம் தெளிவாக வெளிப்படுத்தப்பட்ட மக்களின் கோரிக்கைகளுக்கு இலங்கையுடனான ஈடுபாடு செவிசாய்ப்பதை உறுதி செய்யுமாறு அனைத்து சர்வதேச பிரதிநிதிகளுக்கும்; குருவுயு வேண்டுகோள் விடுக்கிறது. மக்களால் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடிகளை நிவர்த்தி செய்வதற்கான சர்வதேச ஆதரவு வரவேற்கத்தக்கது என்றாலும், தற்போதைய ஜனநாயக விரோத அரசியல் ஒப்பந்தத்தையும் தவிர்க்க முடியாமல் பின்பற்றப்படும் சூழ்ச்சிகளையும் சட்டப்பூர்வமாக்குவதன் மூலம் மக்களின் இறையாண்மையை குறைமதிப்பிற்கு உட்படுத்தக்கூடாது என்று நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.

இந்த நேரத்தில் திரு. ரணில் விக்கிரமசிங்கே சர்வதேச பிரதிநிதிகளின் மரியாதையைப் பெற்றிருக்கிறார் என்ற வாதம் தவறானது மற்றும் வர்க்கம் மற்றும் கருத்தியல் சார்பு ஆகியவற்றிலிருந்து உருவான கருத்தை அடிப்படையாகக் கொண்டது. இத்தகைய மிகையான எளிமைப்படுத்தல்கள், நம்பிக்கையுடனும் கண்ணியத்துடனும் முன்னோக்கிச் செல்வதற்குத் தேவையான பொருளாதார மற்றும் பிற வகையான ஸ்திரத்தன்மைக்கு சட்டபூர்வமான மற்றும் பொறுப்பு வாய்ந்த நிர்வாகமே உத்தரவாதம் அளிக்கும் என்று முன்னெப்போதையும் விட அதிகமாக நம்பியுள்ள இலங்கை மக்களின் ஜனநாயகக் கோரிக்கைகளுக்கு அவமானம் சேர்க்கிறது.
தற்போதைய நெருக்கடியை எதிர்கொள்ள மற்ற தொழிற்சங்கங்கள் மற்றும் மக்கள் இயக்கங்களுடன் இணைந்து செயல்பட குருவுயு உறுதியாக உள்ளது. மக்களின், குறிப்பாக இளைஞர்களின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த எதிர்ப்பு இயக்கம் மற்றும் எதிர்ப்பில் இருந்து, வெளிவரும் தொலைநோக்கு மற்றும் ஜனநாயக அரசியல் தலைமை இலங்கையின் நீண்டகால பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும்.